×

சீர்காழி ரயில் நிலையத்தில் முதல்வர் வருகை பாதுகாப்பு பணி

சீர்காழி, மார்ச் 3:மயிலாடுதுறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு சீர்காழி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை அருகே மன்னம் பந்தல்பகுதியில் ரூ.144 கோடி மதிப்பில் 7 அடுக்குகள் கொண்ட புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கலெக்டர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளா (4ம் தேதி) காலை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் சீர்காழிக்கு வருகை புரிந்து அங்கிருந்து கார் மூலம் திருவெண்காடு சென்று தங்குகிறார். பின்பு 4ம் தேதி காலை திருவெண்காட்டில் இருந்து காரில் புறப்பட்டு மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிலையில் சீர்காழி ரயில் நிலையத்தில் சாலை வசதி பாதுகாப்பு வசதிகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், திமுக செயற்குழு உறுப்பினர் ரவி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தன்ராஜ் மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் ஒப்பந்தக்காரர் சதீஷ் பந்தல் முத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post சீர்காழி ரயில் நிலையத்தில் முதல்வர் வருகை பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sirkazhi railway station ,Sirkazhi ,Minister ,Meiyanathan ,M.K.Stal ,Mayiladuthurai ,Mannam Bandal ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...